வாகன விபத்தில் இரு பெண்கள் பலி
06.08.2023 10:00:00
வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
ரக்வானை மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரக்வானை ஒபடகந்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் பின்னால் அமர்ந்து சென்ற பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.
ராஜாங்கனை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணித்தார்.
இதேவேளை, களவாஞ்சிக்குடி செட்டிபாலம் பிரதேசத்தில் முச்சக்கரவண்டியுடன் மோதிய விபத்தில் வீதியில் பயணித்த 76 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.