பாஜகவிடம் எகிறிய அண்ணாமலை!..
தமிழக பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் போலீஸ் அதிகாரியாக இருந்துவிட்டு தமிழ்நாடு அரசியலுக்கு வந்தவர். பாஜக இவரை பெரியளவு புரமோட் செய்தது. அதேநேரம் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே பிரச்சனை வந்ததால் அண்ணாமலையை தூக்கி விட்டு நயினார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவராக பாஜக தலைமை நியமித்து விட்டது.
அதோடு வருகிற சட்டமன்றத் தேர்தலில் நான் வேலை செய்ய மாட்டேன்.. என் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என சொல்லி அதிலிருந்து விலகியிருக்கிறார் அண்ணாமலை. உண்மையில், அவர் பாஜக தலைமை மீது கோபத்தில் இருந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதுபற்றி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அண்ணாமலையிடம் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர் பல கேள்விகளை எழுப்பி உள்ளதாக சொல்லப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ வெற்றி பெறுவதற்கான வியூகம் தொடர்பாக என்னுடன் ஏன் விவாதிக்கவில்லை?..
திமுகவை தோற்கடிக்க வேண்டிய என்.டி.ஏ-விடம் என்ன வியூகம் இருக்கிறது?..
வியூகம் பற்றி எதுவும் சொல்லாமல் நான் எப்படி களத்திற்கு சென்று அரசியல் செய்ய முடியும்?.. எப்படி தேர்தல் பணியாற்ற முடியும்?..
கமலாலயத்தில் உள்ள கம்ப்யூட்டரில் டைப் செய்து பிரிண்டரில் பிரிண்ட் எடுத்து கையில் கொடுத்து விட்டால் மட்டும் போதுமா?..
எந்த வியூகத்தின் அடிப்படையில் ஆறு தொகுதிகளுக்கு என்னை பொறுப்பாளராக நியமித்தார்கள்?..
இதுதான் வியூகம் என என்னிடம் விளக்கி சொன்னால் நான் ஒரு தொகுதியில் கூட பொறுப்பாளராக பணியாற்ற தயார்..
தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு தொகுதியை சொல்லி என்னை நிற்குமாறு சொன்னால் எப்படி அதில் வெற்றி பெற முடியும்?
வெற்றிக்கான வியூகத்தை கூறினால் பாஜக மற்றும் என்.டி.ஏ வெற்றிக்காக எந்த பணி கொடுத்தாலும் நான் செய்ய தயார்’ என அண்ணாமலை அவர்களிடம் விளக்கம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.