’தலைவர் 171’ பட டீசரை பார்த்த திரையுலக பிரபலம்..

09.04.2024 00:22:16

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ‘தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோ டீசரை தான் பார்த்து விட்டதாகவும் அந்த டீசரை பார்த்து ஆச்சரியமடைந்ததாகவும் திரையுலக பிரபலம் ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ‘தலைவர் 171’. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க இருக்கும்  நிலையில் இந்த படத்தின் ப்ரோமோ டீசர் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.
 

இந்நிலையில் அனிமல் படத்தின் இயக்குனர் இந்த படத்தின் ப்ரோமோ டீசரை தான் பார்த்து விட்டதாகவும் அதை பார்த்து தான் ஆச்சரியம் அடைந்ததாகவும் லோகேஷ் கனகராஜ் வேற லெவலில் அதை உருவாக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
 

மேலும் இதிலிருந்து  ப்ரோமோ   டீசர் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்றும் விக்ரம், லியோ போலவே இந்த படத்திலும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாக உள்ளது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது