நிலநடுக்கத்தால் 203 பேர் உயிரிழப்பு

10.01.2024 16:02:27

ஜப்பானில் புத்தண்டு அன்று ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால், சுமார் 203 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த பாரிய நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டாலும் சுனாமி அலைகள் எழுந்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பசிபிக் பெருங் கடலின் நெருப்பு வளையம் எனப்படும் ரிங்க் ஆப் ஃபயரில் ஜப்பான் அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.