
பிரித்தானியாவில் தமிழர்களுக்கான ஈருருளிப்பயணம்!
01.09.2025 07:55:45
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வினை வலியுறுத்தி கடந்த 28 ஆம் திகதி பிரித்தானியவில் ஈருருளிப்பயண போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை நெதர்லாந்திலும் குறித்த ஈருருளிப்பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பயணத்தின் 4 ஆம் நாளான நேற்று (31) நெதர்லாந்து பிறேடா நகரசபைக்கு முன்பாக ஈருருளிப்பயணம் ஆரம்பமானது.
இந்நிலையில் குறித்த ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் பெல்ஜியம் எல்லையை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.