தடுப்பூசி விழிப்புணர்வுக்காக, 15 கோடி டொலர்களை ஒதுக்கும் கூகுள் நிறுவனம்!

26.01.2021 09:00:59

கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த 15 கோடி அமெரிக்க டொலர்களை நிதித்தொகையாக கூகுள் நிறுவனம் ஒதுக்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தடுப்பு மருந்துகள் எங்கு, எப்போது கிடைக்கின்றன என்று உலக மக்களுக்கு அறிவுறுத்த கூகுள் நிறுவனம் உதவத் திட்டமிட்டுள்ளது.

மேலும் கிராமப் பகுதிகளிலுள்ள குடிமக்களுக்கு தடுப்பு மருந்து குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்துவது மட்டுமல்லாது அவர்களுக்கு  தடுப்பு மருந்துகளை விநியோகிக்க கூகுள் நிறுவனம் மோர்ஹவுஸ் ஸ்கூல் ஆப் மெடிசன், சிடிசி உள்ளிட்டவர்களுடன் கைகோர்த்துள்ளது.

இன்னும் சில வாரங்களில் தடுப்பு மருந்துகளின் இடம் கூகுள் மப்பில் தேடினால் கிடைக்கும். முதற்கட்டமாக அமெரிக்காவின் அரிசோனா, லூசியானா, மிசிசிப்பி, டெக்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் இவ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது  ”  இவ்வாறு சுந்தர்பிச்சை தெரிவித்தார்.