கனடா வன்முறை கும்பல் பட்டியலில் இடம்பெற்ற இந்திய வம்சாவளியினர்..!!

04.08.2022 11:00:00

கனடாவில் வன்முறை கும்பலை சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 பேரின் பட்டியலை அந்நாட்டு போலீசார் வெளியிட்டுள்ளனர். ஒட்டாவா, கனடாவில் வன்முறை கும்பலை சேர்ந்த 11 பேரை அடையாளம் கண்டறிந்து அந்நாட்டு போலீசார் பொது எச்சரிக்கை விடுத்துள்ளனர், அவர்களில் 9 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தீவிர கும்பல் வன்முறையில் தொடர்புடையவர்கள் என்றும், பொதுமக்கள் இவர்களின் அருகில் இருக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒருங்கிணைந்த படைகளின் சிறப்பு அமலாக்கப் பிரிவு (CFSEU-BC) வான்கூவர் போலீசார் மற்றும் BC ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறையுடன் இணைந்து ஒரு பொது எச்சரிக்கையை வெளியிட்டது.

அதில், "ஒரு பொது பாதுகாப்பு எச்சரிக்கை வான்கூவர் போலீசார் மற்றும் BC ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறையுடன் இணைந்து, 11 நபர்களை அடையாளம் கண்டு வருகிறது, அவர்கள் கும்பல் மோதல்கள் மற்றும் தீவிர அளவிலான வன்முறைகளுடன் தொடர்புகொள்வதன் காரணமாக பொது பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளனர்" என்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒருங்கிணைந்த படைகளின் சிறப்பு அமலாக்கப் பிரிவு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இந்த வன்முறை கும்பல் பட்டியலில் உள்ள பெயர்கள்:- ஷாகியேல் பாஸ்ரா (28), அமர்பிரீத் சாம்ரா (28), ஜக்தீப் சீமா (30), ரவ்ந்தர் சர்மா (35) பரிந்தர் தலிவால் (39) ஆண்டி செயின்ட் பியர் (40) குர்பிரீத் தாலிவால் (35) ரிச்சர்ட் ஜோசப் விட்லாக் (35) 40), அம்ரூப் கில் (29), சுக்தீப் பன்சால் (33), சும்திஷ் கில் (28). (வான்கூவர் போலீஸ் ஏஜென்சிகள் இவர்களின் நடுப் பெயரை எழுதவில்லை) மேலும் இந்த நபர்களுக்கு அருகாமையில் இருக்கும் எவருக்கும் இவர்களால் ஆபத்து ஏற்படக்கூடும் என்று தாங்கள் நம்புவதாக போலீசார் தெரிவித்தனர்.