தலிபான்கள் ஆட்சி அமைக்க உதவி: பிரிட்டன் பிரதமர்
21.08.2021 10:16:11
'‛தேவைப்பட்டால் ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உதவி செய்வோம்,'' என, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியளித்து உள்ளார்.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளதாவது: ஆப்கானில் இருந்து வெளியேறி, மற்ற நாடுகளில் தஞ்சம் புக, மக்கள் காட்டிய பதற்றம் சற்று தணிந்து உள்ளது. இதுவரை ஆப்கானில் இருந்து 1,615 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 399 பேர் பிரிட்டன் குடிமக்கள், 320 பேர் தூதரக ஊழியர்கள், 402 பேர் ஆப்கான் மக்கள்.