
நடிகர் பார்த்திபன் வெளியிட்ட பதிவு!
நடிகர் பார்த்திபன் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் போடும் பதிவுகள் இணையத்தில் வைரல் ஆகிறது. அவர் அஜித் பற்றி போட்ட பதிவை பார்த்துவிட்டு, உடனே அஜித் SMS அனுப்பினாராம். அதில் என்ன கூறி இருந்தார் என முழு மெஸேஜையும் பார்த்திபன் வெளியிட்டு இருக்கிறார். |
"ஒருவரோடு ஒருவரை ஒப்பிடாமல், ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் உயர்வாய் பாராட்டி உளம் மகிழச் செய்வது என் வழக்கம்!அப்படி நேற்று முன்தினம் Mr Ajith பற்றி நான் பதிவிட்டதற்கு அவரது அன்புமிகு ஒழுக்கமிகு ரசிகர்கள் நன்றி தெரிவிக்க நான் அதை(யும்) ரசித்தேன். ஆனால் நான் சற்றும் எதிர்பாராமல் அவரிடமிருந்தே அந்தக் குறுஞ்செய்தி வந்தது. " "எந்த எதிர்பார்ப்புமில்லாமல் ஒருவர் நம்மை பாராட்டி வாழ்த்துவதற்கு, சுடச்சுட நன்றி தெரிவிப்பதை அவர் தலையாய கடமையாக நினைக்கிறார் என்பதனை எண்ணி மனதிற்குள் பாராட்ட நினைத்தேன் அது இப்படி வெளியே வந்து விட்டது!." |