ராக்கெட் பூஸ்டரை கேட்ச் பிடித்த மெக்காஸில்லா!
விண்வெளி ஆய்வு மற்றும் ராக்கெட் ஏவுதலில் பல புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி ஆய்வில் பல புதிய மைல்கல்களை எட்டி வருகிறது. நாசாவுடன் இணைந்து விண்வெளி ஆய்வு மையத்திற்கு வீரர்களை அனுப்பி வைப்பது உள்ளிட்ட பல விண்வெளி சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், செவ்வாய்க்கும், நிலவுக்கும் மனிதர்களை அழைத்து செல்வதற்கான விண்கலத்தை தயாரிக்கும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ராக்கெட் ஏவுதலில் கடலில் ராக்கெட் பூஸ்டர்கள் விழுந்து வீணாகும் நிலையில் அவற்றை பத்திரமாக தரையிறக்கும் புதிய நுட்பத்தை டெஸ்லா நிறுவனம்தான் அறிமுகப்படுத்தியது. தற்போது அந்த தொழில்நுட்பத்தில் மேலும் ஒரு படி போய் ராக்கெட் பூஸ்டர்களை மீண்டும் ஏவுதள டவரிலேயே நிலை நிறுத்தும் நுட்பத்தை அடைந்துள்ளது ஸ்பேஸ் எக்ஸ்
சமீபத்தில் ஸ்பேஸ் எக்ஸ் மேற்கொண்ட பரிசோதனை முயற்சியில் ராக்கெட் பூஸ்டர் வெற்றிகரமாக மெக்காஸில்லா டவரில் லேண்ட் ஆனதும், அது சரியாக பிடித்துக் கொள்ளப்பட்டது. இந்த புதிய நுட்பத்தால் விண்வெளி ஆராய்ச்சியில் ராக்கெட் ஏவுதலில் கணிசமான பணம் மிச்சப்படும் என கூறப்படுகிறது. தற்போது பூஸ்டரை மெக்காஸில்லா பத்திரமாக பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.