இளவரசர் வில்லியம் நிறவெறிக் குற்றச்சாட்டு முதல்முறையாக பதிலளித்தார் !
12.03.2021 10:02:39
ஹரி மற்றும் மேகன் ஆகியோரால் சுமத்தப்பட்ட நிறவெறிக் குற்றச்சாட்டு தொடர்பாக ஹரியின் சகோதரர் வில்லியம் பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘அரச பரம்பரை ஒரு இனவெறி குடும்பம் அல்ல’ என்று தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுக்குப்பின் ஹரியிடம் பேசினீர்களா? என கேட்டதற்கு, ‘இல்லை’ என பதிலளித்த அவர், அவரிடம் இது குறித்து பேசுவேன் எனவும் கூறினார்.
ஹரி- மேகன் தம்பதியின் இனவெறி குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதிலளித்த அரச குடும்பத்து முதல் உறுப்பினர் வில்லியம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேர்காணல் ஒன்றின் போது ஆபிரிக்க- அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த மேகன் கர்ப்பமாக இருந்தபோது, அவருக்கு பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் குறித்து அரச குடும்பத்தினர் கவலைப்பட்டதாக மேகன் கூறியிருந்தார். இந்த நிலையில் இதற்கு இளவரசர் வில்லியம் பதிலளித்துள்ளார்.