16,000 பேரை ஆட்குறைப்பு செய்யும் Nestle நிறுவனம்!

16.10.2025 14:29:08

உலகின் மிகப்பெரிய ஊட்டச்சத்து மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே (Nestle) சுவிட்சர்லாந்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளது. இந்நிலையில் நெஸ்லே ( Nestle) நிறுவனம் அடுத்த 2 ஆண்டில் 16,000 பேரை ஆட்குறைப்புச் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது. நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் நவ்ராட்டில் (Philipp Navratil) அதைத் தெரிவித்தார்.

நிறுவனத்தின் வருவாய் 1.9 விழுக்காடு விழுந்ததால் அந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் (Philipp Navratil) விளக்கினார்.

16,000 பேரில் 12,000 பேர் அலுவலக் ஊழியர்கள். அவர்களை ஆட்குறைப்புச் செய்து சுமார் 1 பில்லியன் சுவிட்ஸர்லந்து ஃபிராங்க்ஸை நிறுவனம் சேமிக்கும் என்று கூறப்படுகிறது.

2027ஆம் ஆண்டுக்குள் 3 பில்லியன் சுவிட்ஸ்ரலந்து ஃபிராங்க்ஸைச் சேமிக்க நிறுவனம் திட்டமிடுகிறது என்று திரு நவ்ராட்டில் தெரிவித்தார்.

அதேவேளை Nestle வளர்ச்சி 2022ஆம் ஆண்டிலிருந்து குறைந்துகொண்டே வருவதனால் பல சர்ச்சைகளுக்கு அது ஆளாகியிருக்கிறது. இந்நிலையில் புதிய தலைமை நிர்வாக அதிகாரி (Philipp Navratil)நவ்ராட்டில் சரிசெய்வார் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.