ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'சொப்பன சுந்தரி'
'லாக்கப்' திரைப்படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கி வரும் திரைப்படம் 'சொப்பன சுந்தரி'. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் லட்சுமி பிரியா, தீபா சங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. டார்க் காமெடி ஜானரில் உருவாகி வரும் இந்த படத்துக்கு பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கே சரத் குமார் படத்தொகுப்பு செய்கிறார். முழு வீச்சில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. 'சொப்பன சுந்தரி' படத்தின் மோஷன் போஸ்டரை அண்மையில் படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 'சொப்பன சுந்தரி' படத்தில் இருந்து 'பணக்காரி' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.