அமெரிக்காவிலிருந்து கனடா சென்ற இலங்கையர் விபத்தில் சிக்கி பலி
11.07.2023 22:48:21
அமெரிக்காவில் இருந்து கனடா சென்ற இலங்கையர் விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார்.
கணனி பொறியியலாளரான அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற கல்விபயின்று வரும் வினோஜ் யசிங்க ஜயசுந்தர என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது சடலம்
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு கொட்டாவ மத்தேகொடவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவர் கடந்த மாதம் 22ஆம் திகதி அமெரிக்காவில் இருந்து கனடாவின் வான்கூவர் நகருக்கு தனது கலாநிதி பட்டம் தொடர்பான ஆராய்ச்சி ஆய்வறிக்கையை வழங்க சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.