சீனாவில் வாலிபரின் கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் பலி

09.08.2023 11:58:00

சிலர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சீனாவின் யுனான் மாகாணம் லூபிங் கவுண்டி பகுதியில் வாலிபர் ஒருவர் கத்தியால் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை சரமாரியாக குத்தினார். இதனால் அவர்கள் அலறியடித்தபடி ஓடினர். சிலர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இந்த தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விசாரணையில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட 20 வயது நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் அவர் தனது வீட்டில் தாயை கத்தியால் குத்திவிட்டு பின்னர் பொதுமக்களை தாக்கி தப்பி ஓடிவிட்டார் என்பதும் தெரியவந்தது. தப்பி ஓடிய அவரை போலீசார் கைது செய்தனர்.