ராஜபக்சர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்த கனடா
05.07.2022 00:05:00
கனடாவின் நீதிமன்றின் தீர்ப்பு
கனடாவின் நீதிமன்றின் தீர்ப்பு கோட்டாபய அரசாங்கத்திற்கு பெரும் ஏமாற்றமாக அமைந்ததாக அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையென கனேடிய ஒன்றாறியோ மாகாண சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானமும், ஒன்றாறியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை பிரகடனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குக்கான நீதிமன்றின் தீர்ப்பும் கோட்டாபய அரசாங்கத்திற்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தன.
தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்காலில் மௌனிக்கப்பட்டது
ஆனாலும், அவர்கள் தங்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலையே என்பதை நீதித்துறை சார்ந்து நிரூபிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர் என அவர் வலியுறுத்தியுள்ளார்.