மீண்டெழும் பொருளாதாரம்
கடந்த வருடம் நாட்டின் பொருளாதார சுருக்கம் 2.3 வீதமாகக் காணப்படுவதாக 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்றில் பதிவான மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர், 2023 இன் பிற்பகுதியில் பொருளாதாரம் மீண்டெழ ஆரம்பித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு, நாட்டில் 7.3 வீதமாக பொருளாதார சுருக்கம் காணப்பட்டதுடன், பொருளாதாரம் மிகவும் நிலையற்றதாகவும் இருந்தது.
இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில், பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியை காட்டியதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் 69.8 வீதமாகக் காணப்பட்ட அதிகூடிய பணவீக்கமானது, 2023 ஆம் ஆண்டில் 5 வீதமாகக் குறைக்கப்பட்டதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், 2023 ஆம் ஆண்டு அதிகரித்திருந்த வட்டி வீதங்கள், தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் 2023 ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (