பெருந்தோட்ட மக்களுக்கு கொவிட் நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம்

04.09.2021 06:19:53

கொவிட்-19 காரணமாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் பெருந்தோட்ட மக்களுக்கு பாரபட்சத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள குரல் பதிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில அரச அதிகாரிகளும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.