போதைப்பொருள் கடத்தல் கப்பலை வேட்டையாடிய அமெரிக்க ராணுவம்!

07.02.2026 14:16:52

போதைப்பொருள் கடத்தி சென்ற இரண்டு கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 2 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, போதைப் பொருள் கடத்தல் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்க ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில், போதைப் பொருள் கடத்தல் வழிகளை நன்கு அறிந்த பிறகு, அப்பகுதி வழியாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகு மீது தாக்குதல் நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் அமெரிக்க பாதுகாப்பு படை ஜெனரல் பிரான்சிஸ் எல். டோனோவன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு பசிபிக் கடல் பிராந்தியத்தில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் அமெரிக்க ராணுவத்தினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க படைகள் படகு ஒன்றை தாக்கும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது, அதை அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத்தும் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த விடாபிடியான நடவடிக்கையால் கரீபியன் கடல் பிராந்தியத்தில் உள்ள சில போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர்கள் தங்கள் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர்.

இது அமெரிக்காவுக்கு கிடைத்த வெற்றி, அமெரிக்காவின் எதிர்காலத்தை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாதுகாத்துள்ளார் அமைச்சர் பீட் ஹெக்சேத் குறிப்பிட்டுள்ளார்.