பாக்ஸ் ஆஃபிஸில் மாஸ் காட்டிய மம்முட்டியின் ப்ரமயுகம்!

27.02.2024 08:23:02

கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான கதைக்களன்களை தேடி நடித்து வருகிறார் மம்மூட்டி. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புழு, கண்ணூர் ஸ்குவாட் மற்றும் காதல் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றன.
 

 

இதையடுத்து அவரின் அடுத்த படமாக நைட் வாட்ச் புரொடக்‌ஷன் சார்பில் சசிகாந்த் தயாரிக்கும் பிரமயுகம் என்ற படத்தில் நடித்து அந்த படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. பேய் திரில்லர் வகைப் படமான இதை ராகுல் சதாசிவன் இயக்கி இருந்தார்.
 

இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னையிலேயே கூட இந்த படம் ரசிகர்களால் பெரியளவில் பார்க்கப்பட்டு சிலாகிக்கப்படுகிறது. இதனால் இந்த படம் தமிழில் டப் ஆகி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் ப்ரமயுகம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் உலகளவில் இதுவரை 50 கோடி ரூபாய் அளவு வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.