
கொலம்பியாவை உலுக்கிய நிலநடுக்கம்!
மத்திய கொலம்பியாவில் ஞாயிற்றுக்கிழமை (08) காலை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்து உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.
தலைநகர் போகோடாவிலிருந்து தென்கிழக்கே சுமார் 116 மைல் தொலைவில் உள்ள பராடெபுவெனோ நகரத்திலிருந்து வடகிழக்கே 17 கிலோ மீட்டர் (10.5 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந் நாட்டு நேரப்படி காலை 8:08 மணிக்கு (1308 GMT) 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
சில நிமிடங்களுக்குப் பிறகு அதே பகுதியில் 4 முதல் 4.6 வரையிலான அளவுகளில் கூடுதல் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக கொலம்பிய புவியியல் சேவை தெரிவித்துள்ளது.
கொலம்பியா பசுபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது.
இது அடிக்கடி நில அதிர்வு மற்றும் எரிமலை நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற பகுதியாகும்.