நவாஸ் ஷெரீப் 'விசா' நீட்டிப்பு விண்ணப்பம்: பிரிட்டன் நிராகரிப்பு

07.08.2021 15:11:50

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் 'விசா' நீட்டிப்பு விண்ணப்பத்தை பிரிட்டன் அரசு நிராகரித்து விட்டது.

பாகிஸ்தான் பிரதமராக 2013 - 2017 வரை பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப், 71. ஊழல் வழக்குகளில் பாக்., நீதிமன்றம் இவருக்கு சிறை தண்டனை விதித்து இருந்தது.மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நான்கு வாரங்களுக்கு பிரிட்டன் தலைநகர் லண்டன் செல்ல லாகூர் நீதிமன்றம் இவருக்கு அனுமதி அளித்திருந்தது.

இதையடுத்து 2019 நவ.,ல் நவாஸ் ஷெரீப் லண்டன் சென்றார். தன் விசா காலத்தை நீட்டிக்கும்படி பிரிட்டனின் உள்துறை அமைச்சகத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்தார். ஆனால் இந்த விண்ணப்பத்தை பிரிட்டன் அரசு நிராகரித்து விட்டது. ஆனாலும் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து பிரிட்டன் குடியுரிமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.