பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் இன்று பதவி விலகல்

23.09.2024 08:05:59

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (23) பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய பிரதமர் மற்றும் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள் சபையும் இன்று அமைச்சர் பதவியை விட்டு விலகவுள்ளனர்.

எவ்வாறெனினும், புதிய ஜனாதிபதி தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர் அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குரியவர்கள் அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி தற்போது அமைச்சுப் பதவிகளில் கடமையாற்றும் அமைச்சர்களும் அவரது தனிப்பட்ட ஊழியர்களும் வெளியேறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.