மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைத்தது ஏன்?
திருச்சியில் நடந்த மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல் மற்றும் பூத் கமிட்டி குறித்து கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் , தங்கள் கூட்டணி குறித்து சிலர் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தல் குறித்து கமல்ஹாசன் தனது கட்சியினருடன் ஆலோசனை!
வரும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்து திருச்சியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கூட்டணியின் முக்கியத்துவத்தையும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் நிர்வாகிகளுக்கு விளக்கி கூறினார்.
மக்கள் நீதி மய்யம் மண்டல ஆலோசனை கூட்டம் - திருச்சி!
திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த மண்டல ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், "நாங்கள் வைத்துள்ள கூட்டணி குறித்து புரியாமல் பலர் திரித்து சில கருத்துக்களை கூறுகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
ம நீ ம எத்தனை தொகுதிகளில் போட்டி?
கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, "எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து உங்களிடமா பேசுவது?" என்று பதிலளித்துவிட்டு அவர் சென்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஒவ்வொரு பூத்திலும் கட்சி உறுப்பினர்களை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
எக்சிபிஷன் போட்டா கூட்டம் கூடும்- விஜய்யை தாக்கி பேசிய உதயநிதி ஸ்டாலின்
ம நீ ம நிர்வாகிகள் உற்சாகம்!
கூட்டணியின் நோக்கத்தையும், அதன் மூலம் மக்கள் நீதி மய்யம் அடைய உள்ள வெற்றிகளையும் நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்ததன் மூலம், அவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினார் கமல்ஹாசன். இந்த கூட்டணி, எதிர்வரும் தேர்தலில் ஒரு வலுவான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.