தலிபான்களுடன் இணக்கமாக செயல்பட வேண்டும்: இம்ரான் கான்

17.09.2021 12:51:46

'ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்களுடன் சர்வதேச சமூகம் இணக்கமாக செயல்பட வேண்டும்' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து உள்ளார்.



பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளதாவது: ஆப்கனை தலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டனர். இப்போது அவர்கள் ஒருங்கிணைந்த அரசை உருவாக்கி நிர்வகிப்பது தொடர்பான ஆலோசனையில் உள்ளனர். அவர்களுக்குள் உள்ள பல்வேறு பிரிவுகள் ஒருங்கிணையும்போது, 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு மீண்டும் அமைதி திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.



ஆனால், இது சரியாக நடக்காமல்போனால், மிகவும் கவலையளிக்கும் பிரச்னையாக மாறிவிடும். அங்கு மனிதகுலத்துக்குப் பெரிய ஆபத்துகள் ஏற்பட்டுவிடும். அகதிகள் பிரச்சனை உருவாகும். ஆப்கன் மண்ணில் பயங்கரவாதமும் அதிகரித்துவிடும். எனவே, தலிபான்களுடன் சர்வதேச சமூகம் இணக்கமாக செயல்பட வேண்டும். ஆட்சி அமைக்க அவர்களுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. அவர்களை நாம் சரியான பாதையில் வழிநடத்த வேண்டும்.இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்து உள்ளார்.