கொவிட்-19 தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஸ்பெயின்

04.02.2021 09:08:00

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் 60ஆயிரத்து 370பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 7ஆவது நாடாக விளங்கும் ஸ்பெயினில், இதுவரை 29இலட்சத்து 13ஆயிரத்து 389பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 31ஆயிரத்து 596பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 565பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்காயிரத்து 836பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.