லைக்காவின் ”லொக்டவுண்” படத்தின் முதல் பாடல் வெளியானது!
13.06.2024 07:08:00
பிரபல படத்தயாாிப்பு நிறுவனமான லைக்காவின் ”லொக்டவுண்” திரைப்படத்தின் முதல் பாடலான “லாவா லாவா” என்ற பாடல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தினை அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளாா்.
குறித்த திரைப்படம் கொரோனா காலத்தைப் பிரதிபலிக்கும் கதைக்களத்தைக் கொண்டு தயாாிக்கப்பட்டுள்ளதுடன், படத்தின் டீசா் சில நாட்களுக்கு முன்னா் வெளியாகி இரசிகா்களிடையே பெரும் வரவேற்பினையும் பெற்றிருந்தது.
“லாவா லாவா” என்ற பாடலை சினேகன் எழுதியுள்ளதுடன், பிரியா ஜெர்சன் பாடியுள்ளார்.
இப்படத்திற்கு ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
இத்திரைப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதால் இரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.