ஒன்றிய அரசின் நடவடிக்கையால் மக்கள் அதிர்ச்சி!!!

06.10.2021 07:50:59


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. 

இதனால், தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டத்திலும், பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது. இதனிடையே, தமிழக அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 குறைத்ததால் விலை ரூ. 100க்கு கீழ் சரிந்தது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி முதல், பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தினமும் 25 காசு முதல் 30 காசு வரையில் அதிகரித்து வருகிறது.அதன்படி சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 100.23 ரூபாய், டீசல் லிட்டர் 95.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 100.49 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 95.93 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்து 100 ரூபாயை தாண்டி விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலியாக அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.