ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனை - சிக்கிய 6 இரகசிய ஆவணங்கள்!

22.01.2023 14:39:08

டெலவேரில் உள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வீட்டில் 06 இரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க நீதித்துறையின் புலனாய்வாளர்கள் குழு பைடனின் வீட்டை சுமார் 13 மணி நேரம் சோதனை செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு கண்டெடுக்கப்பட்ட ரகசிய ஆவணங்கள் அவற்றில் பைடன் செனட்டராக இருந்த காலத்திலும், துணை அதிபராக பணியாற்றிய காலத்திலும் பல ஆவணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

நீதித்துறையிடம் ஒப்படைப்பு

முன்னதாக, அமெரிக்க அதிபரின் வாஷிங்டனில் உள்ள வீட்டில் சில இரகசிய ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அது தொடர்பான ஆவணங்களை வீட்டில் வைத்திருப்பதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் தேசிய ஆவண காப்பகம் மற்றும் நீதித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.