பிரான்ஸில் புதிதாக 2,624 நோயாளிகளும் 22 இறப்புக்களும் பதிவு !

20.06.2021 11:52:33

 

ஐரோப்பாவில் அதிகம் கொரோனா தொற்று பதிவாகிய பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,624 நோயாளிகளும் 22 இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

இதனை அடுத்து அங்கு கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 5,755,496 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 110,724 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேலும் 8,485 பேர் குணமடைந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,555,411 ஆக காணப்படுகின்றது.

கொரோனா தொற்றுகள் எதிர்பார்த்ததை விட வேகமாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் பிரான்ஸில் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பியுள்ளது.