இந்தோனேசியா-ரஷ்யா இடையே மீண்டும் நேரடி விமான சேவை

28.06.2024 08:25:57

இந்தோனேஷியா – ரஷ்யா இடையேயான நேரடி விமானம் மீண்டும் இயக்கப்படும் என இந்தோனேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாகா யூனோ தெரிவித்துள்ளார்.

எனினும், நேரடி விமானங்களை இயக்குவதற்கு ரஷ்யா சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

இதுகுறித்து இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தகள் நடைபெற்று வருவதாகவும், அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்ததன் பின்னர், இருநாடுகளுக்கிடையேயான நேரடி விமானம் மீண்டும் இயக்கப்படும் என இந்தோனேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் சுற்றுலாதுறை முக்கிய பங்கு வகிக்கிறது.

அதன்படி, சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு இந்தோனேஷியா அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் இந்தோனேசியாவின் சுற்றுலாத்துறை வருமானத்தில் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.