கிராமத்து பின்னணிக்கு செல்லும் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம்ரவி அண்மையில் சைரன் படத்தில் நடித்து இருந்தார். படம் பெரியளவில் பேசப்படவில்லை. பின் , கிருத்திக்கா உதயநிதி இயக்கிய காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்து படப்பிடிப்புகளை முடித்துள்ளார்.
இந்த நிலையில், ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ஜெயம் ரவி அடுத்து நடிக்க இருக்கும் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தை அடங்கமறு மற்றும் சைரன் படங்களை தயாரித்த ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படம் கிராம பின்னணியில் உருவாகும் குடும்ப பொழுதுபோக்கு கதையம்சம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இயக்குநர் பாண்டிராஜ் கடைசியாக இயக்கிய எதற்கும் துணிந்தவன் படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.