வெள்ளத்தில் நடந்து சென்று திருமணம் செய்த புதுமண தம்பதி
வீடியோவை பார்த்த பயனர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருவர், காதல் ஜோடிக்கு புயலோ, வெள்ளமோ தடையாக இல்லை என பதிவிட்டார். மேலும் படிக்க பிலிப்பைன்ஸ் நாட்டில் டோக்சுரி என பெயரிடப்பட்ட புயல் கடுமையாக தாக்கியதில் அங்குள்ள பல மாகாணங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியினர் வெள்ளத்தில் நடந்து சென்று திருமணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மலோலோஸ் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் வெள்ளநீர் சூழ்ந்து இருப்பதையும், அந்த தேவாலயத்துக்கு மணமகள் டயான் விக்டோரியானோ வெள்ளத்தில் நடந்து செல்வதையும் காண முடிகிறது. பின்னர் தேவாலயத்துக்கு சென்று மணமக்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில், இதுதொடர்பான வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பயனர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், காதல் ஜோடிக்கு புயலோ, வெள்ளமோ தடையாக இல்லை என பதிவிட்டார். மற்றொரு பயனர், கடற்கரை கல்யாணம் போல் உள்ளது. மணல் குறைவு என வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.