நேபாளத்தில் மீண்டும் போராட்டம் .
21.11.2025 16:24:51
நேபாளத்தில் இளைஞர்களுக்கும், முன்னாள் பிரதமர் சர்மா ஒலியின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பரா மாவட்டத்தில் நடந்த பேரணியின்போது ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பதற்றம் அதிகரித்தது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையைத் தடுக்க மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.