ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், பயணம் அவசியமா ?

28.01.2021 11:09:03

 

பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இன்று (வியாழக்கிழமை) ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் பிரித்தானியா இணைந்து செயற்படுவதற்கான வலிமையை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொற்றுநோய்க்கு பதிலளிப்பதில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவிக்க வாய்ப்புள்ளது.

ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், பயணம் அவசியமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைவர்கள் பொது மக்கள் மீது விதிக்கும் அதே விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று அவர் வாதிட்டுள்ளார்.

மேலும் இந்த காரணத்திற்காக அபெர்டீனில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட வருகையை அவர் நிராகரித்தார்.