சுப்புராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’

19.04.2025 00:40:15

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது. இதற்கிடையில் இன்று வெளியாகவுள்ள டிரைலரை எடிட் செய்தது இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்தான் என்று கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார். அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் படங்களில் அவரே படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய சில குறும்படங்களுக்கும் அவர் படத் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.