கத்திக் குத்துச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழப்பு!

29.03.2024 07:34:53

அமெரிக்காவின் இல்லினோய்ஸ் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில், காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் எனவும், சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பொலிஸார் சென்றிருந்த வேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதுடன், காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த படுகொலைச் சம்பவத்திற்கான காரணம் என்பதும் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை என பொலிஸார்         தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.