ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசி 66 சதவீதம் செயற்திறன் கொண்டது!
ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி ஒரே டோசிலேயே 66 சதவீதம் செயற்திறன் உள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனையில் இந்த முடிவு தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசி ஒரே டோஸில் 66 சதவீதம் திறன் உள்ளதாகச் சோதனையில் தெரியவந்துள்ளது.
மற்ற கொரோனா தடுப்பூசிகள் இரு டோஸ்கள் தேவைப்படும் போது இந்த மருந்து ஒரே டோஸில் 66 சதவீதம் நோய்த் தடுப்பு திறனை அளிக்கிறது.
இந்த தடுப்பூசிக்கு ஏற்கனவே பிரித்தானியா அரசாங்கம், 300 மில்லியன் டோஸ்களுக்கு முன்பதிவு அளித்துள்ளது. இந்த மருந்து சோதனையில் எவ்வித பக்க விளைவுகளும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தங்களின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கும்படி அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அடுத்த வாரம் விண்ணப்பிக்க உள்ளது.