1714 ஆவது நாளாக தொடரும் காணாமல் போன உறவுகளின் போராட்டம்

27.10.2021 16:08:55

வவுனியாவில் கடந்த 1714 ஆவது நாட்களாக வீதியிலிருந்து போராடி வரும் காணாமல் போன உறவுகள் மழைக்கு மத்தியிலும் தமது கோரிக்கையினை முன்வைத்து இன்றும் போராடி வருகின்றனர்.

வவுனியாவில் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (27) 1714 ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசர கால சட்டத்தினை நீக்க கோரியும் தமது போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் கடந்த 1714 ஆவது நாட்களாக வீதியிலிருந்து போராடி வரும் காணாமல் போன உறவுகள் மழைக்கு மத்தியிலும் தமது கோரிக்கையினை முன்வைத்து இன்றும் போராடி வருகின்றனர்.

வவுனியாவில் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (27) 1714 ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசர கால சட்டத்தினை நீக்க கோரியும் தமது போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.