நாடு தழுவிய ஹர்த்தால்!

03.05.2022 05:03:44

நாட்டின் அனைத்து அரச, அரை அரசாங்க, தனியார் மற்றும் தோட்டத் தொழிலாளர்களும் ஹர்த்தாலுக்கு தயாராகி வருவதாக அறியமுடிகிறது.

மே மாதம் 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தால் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, அன்றைய தினம் அனைத்து அரச, அரை அரசாங்க, தனியார் மற்றும் தோட்டத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் உள்ள மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.