முதலாம் திகதி முதல் பொதுசேவைகள் மீள ஆரம்பம்!
30.09.2021 05:56:43
நாளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதுடன், அத்தியாவசிய அரச சேவைகளுக்கு முன்னுரிமையளித்து, பொது சேவையை வழமைபோன்று செயற்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.
இணையவழி காணொளி மூலம் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதற்கான சுற்றுநிருபம்இன்று வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.