இஸ்ரேலால் ஈரானுக்கு எதிரான போரில் தள்ளப்பட்டோம்.
|
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்குத் தயாராவதை அறிந்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்கூட்டியே தாக்குதல் நடத்தியது என அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஈரான் விவகாரத்தில் நிச்சயமாக ஒரு உடனடி அச்சுறுத்தல் இருந்தது. உடனடி அச்சுறுத்தல் என்னவென்றால், ஈரான் தாக்கப்பட்டால், ஈரான் தாக்கப்படும் என்று நாங்கள் அறிந்திருந்தோம், அவர்கள் உடனடியாக அமெரிக்கா மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நாங்கள் நம்பினோம், அதனாலையே முந்திக்கொண்டதாக விளக்கமளித்துள்ளார். |
|
இந்த நிலையில், இஸ்ரேலால் அமெரிக்கா போருக்கு தள்ளப்பட்டது என்ற இந்த வெளிப்பாடு ஜனநாயகக் கட்சியினரையும் குடியரசுக் கட்சியினரையும் சீற்றப்படுத்தியது. அமெரிக்கப் படைகளுக்கு சேதம் விளைவிக்கும் முயற்சியை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது என்பதை ரூபியோ ஒப்புக்கொண்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோவாகின் காஸ்ட்ரோ சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். கன்சர்வேட்டிவ் பண்டிதரான மாட் வால்ஷ் குறிப்பிடுகையில், ஒரு போருக்கு இஸ்ரேல் அமெரிக்காவை தள்ளிவிட்டுள்ளது என்பது, இது அவர் சொல்லியிருக்கக்கூடிய மிக மோசமான விடயம் என பதிவு செய்துள்ளார். ஈரான் ஏற்கனவே தனது ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருந்ததாகவும், போருக்கு தயார் நிலையில் இருந்ததாகவும் ரூபியோ கூறியுள்ளார். ஈரானின் ஏவுகணைகள் அமெரிக்காவில் எங்கு குறிவைக்கப்பட்டன அல்லது எந்த அமெரிக்க இலக்குகள் வரம்பிற்குள் இருந்திருக்கும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. இதனிடையே, ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை குறித்து அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்காததற்காக இரு அவைகளிலும் உள்ள ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப் நிர்வாகத்தை கண்டித்துள்ளனர். ஆனால், அப்படியான சட்டம் ஏதும் இல்லை என ரூபியோ குறிப்பிட்டுள்ளார். மேலும், போர் தொடங்கிய 48 மணி நேரத்திற்குப் பிறகு அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. அதை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம் என்றார். மட்டுமின்றி, 535 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது முடியாத ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். |