இலங்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

20.01.2024 17:48:48

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது கவலையளிக்கின்றது.

இத்தகைய கைது நடவடிக்கைகளால் மீன்பிடித்  தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள மீனவர்களிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்தத் தளர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்திட இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டும். அத்துடன் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.