
'யாருமே யூகிக்க முடியாத கூட்டணி ஒன்று உருவாகும்'.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''நான் சொல்வதை நிறையப் பேர் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். ஏற்கனவே நான்கு கூட்டணிகள் அமைய வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னேன். திமுக தலைமையில் ஒரு கூட்டணி, என்.டி.ஏ கூட்டணி, விஜய் தலைமையில் கூட்டணி, நாம் தமிழர் சீமான் அவர் எப்பொழுதும் தனியாகத்தான் போட்டியிடுவார். இந்த முறையும் தனியாகத்தான் போட்டியிடுவேன் என அறிவித்து விட்டார். |
இன்னும் கொஞ்சம் பொறுங்கள் தமிழ்நாட்டில் உள்ள பல கூட்டணியில் உள்ள கட்சிகள் மாறி நீங்கள் எல்லாம் எண்ணாத அளவிற்கு, உங்களால் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு கூட்டணியும் உருவாக வாய்ப்பு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை பொறுப்பில் இருக்கும் வரை இதிமுகவோட இணைவதற்கு வாய்ப்பில்லை. தேர்தல் முடிந்த பிறகு ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லாம் ஒரு அணியில் வந்து பழனிசாமியை வீழ்த்திவிட்டு இணைவதற்கு வேண்டுமானால் வாய்ப்பு இருக்கிறது'' என்றார். |