ஹிஜாப் விவகாரத்தில் கருத்து சொன்ன பரீனா
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பரீனா ஆசாத். அதையும் தாண்டி, சமூகம் சார்ந்த விஷயங்களில் சில தேவையற்ற மரபுகளை உடைத்து கருத்து சொல்லி வருவதால் பரீனாவை சப்போர்ட் செய்து சிலரும், அப்யூஸ் செய்து சிலரும் கருத்து சொல்லி வருகின்றனர். இந்நிலையில், நாட்டில் இன்று முக்கிய பிரச்னையாக வெடித்திருக்கும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியும் விவகாரம் பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த பரீனா, 'ஹிஜாப் அணிவது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம். முன்பின் தெரியாதவர்கள் உங்கள் வீட்டுக்குள் நுழைந்து இதை செய், அதை செய் என்று உத்தரவு போட்டால் அதை நீங்கள் அனுமதிப்பீர்களா?' என்று அதிரடியாக பதில் அளித்துள்ளார். ஹிஜாப் விவகாரத்தில் பரீனாவின் கருத்து அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.