அன்னப்பூரணியால் நயன் மீது வழக்கு

11.01.2024 17:52:21

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீது நீதிமன்றம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

சமீபத்தில் அவர் நடித்த ‘அன்னபூரணி’ படத்தின் மூலம் கடவுளை அவமதிப்பதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. நயன்தாரா உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘அன்னபூரணி’ இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா, தயாரிப்பாளர்கள் ஜதின் சேத்தி மற்றும் ஆர் ரவீந்திரன் மற்றும் நெட்ஃபிக்ஸ் இந்தியாவின் தலைவர் மோனிகா ஷெர்கில் உட்பட ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அன்னப்பூரணி திரைப்படம் டிசம்பர் 1, 2023 அன்று திரையிடப்பட்டது, டிசம்பர் 2க்குப் பிறகு அது நெட்ஃபிலிக்ஸ்ஸில் வெளியிடப்பட்டது. எனினும் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகள் காரணமாக தற்காலிகமாக அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய அறிக்கைகளை நீக்கிய பின் மீண்டும் காட்சிப்படுத்தப்படும் என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.