நற்சான்றுகளைக் கையளித்தனர்

06.06.2024 08:14:11

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட 05 உயர்ஸ்தானிகர்கள் மற்றும் 09 தூதுவர்கள் நேற்று கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.

நியூசிலாந்து, சைப்ரஸ் குடியரசு, மாலைதீவுகள், சியரா லியோன் குடியரசு மற்றும் மொரீஷியஸ் குடியரசு என்பவற்றுக்கான உயர்ஸ்தானிகர்களும் குவாத்தமாலா குடியரசு, அல்ஜீரியா மக்கள் ஜனநாயகக் குடியரசு, எஸ்டோனியா குடியரசு, லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசு, கொலம்பியா குடியரசு, துருக்கி குடியரசு, அயர்லாந்து, ஹெலனிக் குடியரசு (கிரீஸ்) மற்றும் பல்கேரியா குடியரசு ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை வரவேற்பதற்காக கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஒரு சிறிய விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நற்சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட பின்னர் புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.