சார்பட்டா பரம்பரை 2

11.01.2025 08:10:00

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு OTT - ல் நேரடியாக வெளியான திரைப்படம் சார்பாட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பா.இரஞ்சித் திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, சமீபத்தில் 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்நிலையில், தனது துணை இயக்குனர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பா.ரஞ்சித் சார்பாட்டா பரம்பரை இரண்டாம் பாகம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், " இப்போது தான் 'சார்பட்டா பரம்பரை 2' படத்தின் இறுதிக் காட்சியை எழுதி முடித்தேன். ஒரு படத்தினை எழுதி முடிப்பது போல் மகிழ்ச்சியான விஷயம் வேறு எதுவுமில்லை.

எழுதும்போது எனக்கு கிடைத்த இந்த சந்தோஷம் துணை இயக்குனர் முகத்திலும் அவருடைய புத்தகத்தை முடிக்கும்போது இருந்ததைப் பார்த்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்திற்காக நடிகர் ஆர்யா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.