புதிய ஆயுதமாக உருவெடுத்துள்ள ‘நாட்டின் உள்ளக சட்டங்கள்

14.03.2024 07:29:26

நாட்டு மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை முடக்குவதற்கான புதிய ஆயுதமாக ‘நாட்டின் உள்ளக சட்டங்கள்’ இலங்கை அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரன தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை அரசாங்கத்தினால் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டம் தொடர்பில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து தமது கரிசனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் அரசாங்கம் புதிய சட்டவரைபுகளைத் தயாரிக்கும்போது அதனுடன் தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடுதல் உள்ளடங்கலாக உரிய செயன்முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌஷல்ய நவரத்னவும் அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.