இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை.

12.11.2025 08:00:00

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை எனப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

நாட்டின் புலனாய்வுப் பிரிவுகள் தீவிரமாக செயற்படுவதால், நாட்டின் பாதுகாப்பு குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது: "தற்போது அத்தகைய அச்சுறுத்தல் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இலங்கையின் புலனாய்வுப் பிரிவுகள் தீவிரமாக செயற்படுகின்றன. நமது பாதுகாப்புப் படைகள், குறிப்பாக முப்படைகள் மற்றும் பொலிஸார், தேசிய பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்துகின்றனர். எனவே, தேசிய பாதுகாப்பு குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை."

வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குறித்து வெளிநாடுகளில் இருந்து செயற்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பின்வருமாறு பதிலளித்தார்.

கேள்வி: பாதாள உலகக் குழுவினர் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறினீர்களல்லவா? 

அமைச்சர்: "இல்லை, நான் அவ்வாறு கூறவில்லை. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சில குழுக்கள் அதில் இருந்து வெளியேற விரும்புகின்றன என்றுதான் கூறினேன். கடத்தலில் ஈடுபடுபவர்கள் அதிலிருந்து வெளியேற முயற்சிப்பது ஒரு நல்ல நிலைமைதான்."